Tuesday, January 19, 2010

இந்த மாதத்தில் பார்த்த 3 படங்கள்
அவதார் ,பா ,ஆயிரத்தில் ஒருவன்

மேலுள்ள படங்கள் மூன்றும் நான் இந்த தையில் பார்த்த படங்கள் என்பதை விட பார்த்து சிலாகித்த படங்கள் எனலாம் .மூன்றும் வேறு வேறான கதைக்களங்கள் ;வேறு வேறான கதைக்கருக்கள்.


இது விமர்சனம் இல்லை .அது எழுத எனக்கு அறிவு போதாது என்று நினைக்கிறேன் .


வித்தியாசமான படம் என்று தமிழில் இயக்குனர்கள் .நடிகர்கள் எல்லாம் சொல்லி விட்டு பின்பு அதே பழைய பழி வாங்கும் பல்லவியை (வில்லனை மட்டும் அல்ல நம்மளையும் சேர்த்து )எடுத்து விடுவார்கள் .


ஒரு திரில்லர் கதை ,விஞ்ஞான புனை கதை போன்ற கதைகளில் எனக்கு அதிக ஆர்வம உண்டு.ஆனாலும் அவதார் என்னை இருக்கையில் கட்டிப்போட்டு விட்டது .இருக்கையில் நுனிக்கு வந்து பார்க்க வைத்தது (இங்கிலீஷ் விலங்கல்ல அதான் முன்னுக்கு வந்து காது குடுத்து கேட்ட )உண்மையில் முழுவதும் கற்பனை கலந்த கிராபிக்ஸ் படம் .நமக்கு தெரிந்த சில உயிரினங்கலையே இன்னும் வேறு விதமாக காட்டி அசத்தியிருக்கிறார் கமறுன் .
குதிரை ,பருந்து என்பனவற்றை அவருடைய கற்பனைகுதிரையினை தட்டி நமக்கு விருந்து கொடுத்திருக்கிறார்.
எனக்கு பிடித்த விடயம் அப் படத்தில் புதிதாக வேறு விதமான ஒரு உயிரினத்தையும் உருவாக்காமல் நமக்கு தெரிந்த உயிரினங்கள் ஆகட்டும் ,தாவரங்கள் ஆகட்டும் (தொட்டசுறுங்கி ,காளான் ,ஆலமரம் )போன்றவற்றை இன்னும் கொஞ்சம் உருவகப்படுத்தி
எல்லா மக்களுக்கும் புரியும் படி பண்ணியிருப்பது .கதை என்பதை விடுத்து பிரமாண்டம் என்பதை அதிகப்படுத்தி அதான் மூலமாகவே படத்தினை கொண்டு செல்லும் திறமை சிலருக்கு தான் வரும் அதில் அவர் உயரத்தில் இருக்கிறார் உதாரணம் ஜுராசிக்க் பார்க்,டைட்டானிக் படங்கள் .தமிழில் இப்படி படம் எடுக்கும் கலை சங்கர் ஒருவருக்கு மட்டும் தெரியும் எனலாம் .

அடுத்து பா
சிவாஜி என்கிற கலைஜனை கடைசிக்காலத்தில் பாழாக்கி விடார்கள் தமிழ் சினிமா துறையினர் .அமிதாப் தனது அடுத்த முத்திரையை பதித்து விட்டார் .இது ஒரு மாதிரியான கதை . நமது கஜனி படம் போன்ற கதை ,அபிசெக்கே க்கும் ;படத்தில் இருக்கிறார் ,ஆனாலும் அமிதாப்பே படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் .கமல் மட்டுமே எனக்கு தெரிந்து எப்படி சோதனை முயற்சிகளில் ஈடுபடுவார்.அமிதாப் அழகிய முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் .இது ஒரு ஜதார்தமான கதை (கஜனியில் குளோனிங் அப்பிடி என்று கூட சில காட்சிகள் இருக்கும் )படம் ஆரம்பித்ததும் முடிவதும் தெரியாமலே போகும் .படம் முடிந்து வெளியில் வரும் போது நெஞ்சம் எதோ கனத்து போவது மட்டும் உண்மை .இறுதியாக ஆயிரத்தில் ஒருவன்


காதல் கொண்டேன் ,7 g போன்ற அழகிய படங்களை தந்த செல்வா என்ன புதிதாக பண்ணியிருப்பார் என்று நினைத்து தியேட்டர் சென்றால் அவருடைய பழைய இமேஜ் எங்கோ போய் புதிதான ஒரு இமேஜ வரும் படி செய்து விட்டார் செல்வா

அவருடை அதே ஒரு A தனமான நடை படம் முழுவதும் தொடந்தாலும் பெரிதாக தெரிய வில்லை .தமிழ் படங்களில் தரம் இப்போது கஊடிக்கொண்டு செல்லுகிறது என்பதட்ட்கு இப்படமும் ஒரு உதாரணம் .நாம் இப்போது பதினாறு வயதிளினே பத்தி பேசுவது போல இன்னும் இருபது வருடங்களின் பின் ஆயிரத்தில் ஒருவன் பத்தி பேச போவது நிட்ட்சயம் .


இதில் கதைக்களம் இரண்டு காலங்கள் நிகழ்காலம் ,இறந்த காலம் என மாறு பட்டிருக்கிறது
அதை அழகான முறையில் கோருத்து அதில் வெற்றியும் கண்டு இருக்கிறார் செல்வா .
டிஸ்கி ; கமருன் 5 கலியாணம் முடிச்சவர்குறிப்பு ;ஜுராசிக்க் பார்க் கமரூன் எடுக்கல்ல மன்னிக்கவும்
aliens,போன்ற பிரமாண்ட படங்கள் எடுத்தவர் .மேலதிக விபரம்