Friday, January 29, 2010

Monday, January 25, 2010

Sunday, January 24, 2010

இவர் வென்று அவர் தோற்றால்

ஜனாதிபதி தேர்தல் பற்றிய இன்னும் ஒரு பதிவு

இரண்டு சிங்கங்கள் தேர்தலில் போட்டியிடுகின்றன (சிங்கமா குள்ளநரியா என இன்னும் சில நாளில் தெரிந்து விடும்.இருந்த போதிலும் வாக்குறுதிகளை வீசுவதை பார்த்தால் இலங்கை நாடு ஜப்பானை விஞ்சி விடும் போல் தெரிகிறது .

ஆனால் தற்போது அதிகாரம் உள்ளவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ......

 • சில நேரங்களில் A9 பாதையில் கிளைமோர் வெடிக்கலாம் .
 • திரும்பவும் ஏரோ லங்கா தந்து பெட்டியை நிரப்ப ஆரம்பிக்கலாம்
 • அப்போலோ ஹோஸ்பிடல் போல் இன்னும் சில தனியார் நிறுவனங்கள் அரச உடமை! ஆக்க படலாம் .
 • மீண்டும் மேர்வின் சில்வா தனது திறமையை வெளிகொனரலாம் !!!!!!!!!!
 • அமைச்சர்களின் தொகை இரட்டை சதம் அடிக்கலாம் (ரொம்ம்ப ஒவர போய்ட்டோ )
 • சரத் போன்செயக்க அமெரிக்க போய் போற்குற்றம் பற்றி விரிவாக விளக்கம் அளிக்கலாம்.
 • ரணில விக்கிரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வு (கட்டாய )பெறலாம்.
 • முஸ்லிம் காங்கிரசின் மூக்கு இன்னும் ஒருமுறை உடை படலாம் .
 • ஊடக சுகந்திரம் எனும் சொல் அகராதியில் இருந்து நீக்க படலாம்

இப்படி எழுதுபவர்கள் நாலாம் மாடியில் களி தின்பது கட்டாயமாக்க படலாம் .


அதிகாரம் தோற்று ஜனரால் வென்றால்
 • திரும்பவும் அமெரிக்காவும் ஐரோப்பிய சமூகமும் இலங்கை விடயத்தில் மூக்கு நுழைக்கும் .
 • சீனாவும் இந்தியாவும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல என்று பழமொழி சொல்லலாம் .
 • பல்வேறு உலக வணிக நிறுவனங்கள் வழியாக அமெரிக்க இலங்கையில் கால் வைக்கலாம்
 • முதலாவதாக அரச தொலைக்காட்சி ,வானொலி நிலைய தலைகள் வெட்ட பட்டு சிறை போகலாம் .
 • பல அமைச்சர்கள் கட்டாய பனி நீக்கம் செய்ய படுவார்கள் .(கருணா அம்மன்,டக்களஸ் உட்பட )
 • பல செல்வந்தர்கள் உருவாகுவார்கள் ஆனால் ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள் .
 • பல அரச தலைகள் வெளி நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரும் .(மகிந்தா இல்ல )
இன்னும் பல விடயங்கள் இருக்கு ஆனாலும் ஏன் நம்மக்கு கொலைவெறி என்று விட்டு விட்டேன் .சில வானொலிகள் இப்போதோ கவுண்டவுன் போட ஆரம்பித்து விட்டன .வெல்ல போவது யார் வெள்ளிக்கிழமை தெரியும் என்கிற பாணியில் ,

ஆனாலும் இந்த தேர்தல் இரண்டு வசனங்களுக்கு உயிர் கொடுத்து இருக்கிறது

ஒன்று
தெரிந்த பேயும் தெரியாத பிசாசும்

மற்றது
எய்தவன் அம்பு சம்பந்தமான பழமொழி

எனது வாக்கு யாருக்கு என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்

Friday, January 22, 2010

கடவுள் ஒரு சந்தேகப்பொருளா ?கோவில் கருவறையில் நடந்த அசிங்கங்கள் !!!!!!!!!! கடவுள் மீதான என் சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது .அதுக்காக கடவுள் A.K 47 கொண்டு அந்த புசாரியினை சுட வேண்டும் என்று நான் சொல்ல வர வில்லை .
அப்பிடியான ஒரு மன நிலையை ஒரு புனிதமான கடவுளுக்கு !!!! தொண்டு செய்யும் ஒருவனுக்கு உருவாகியது கடவுள் தானே என்பதுதான் என் சந்தேகம்

பிச்சைகாரனையே விட்டுக்குள் எடுக்க மறுக்கும் சமுகம் இப்படியான போலி ஆசாமிகளிடம் சிக்குவது எப்படி என்றுதான் புரியவில்லை .இங்குதான் தந்தை பெரியாரின் சிந்தனைகள் வலுப்பெற்று நிற்கின்றன .

தனக்கு நைவேத்யம் படைக்கும் ஒருவனுக்கு இப்படியா மனநிலை வர காரணம் என்ன என்பது அந்த கடவுளுக்கு தெரயுமோ தெரியாதோ எனக்கு தெரியாது
ஆனால் அவர் இருப்பது ஒரு உண்மை எனில் இப்படி ஒரு மனநிலையுடன் அவன் இருக்கிறான் என்றால் அந்த மனநிலையினை மாற்ற முயன்று இருக்க வேண்டும் .

இப்படி அவனின் மனநிலையினை மாற்ற முடியாத கடவுளும் மதமும் பல்வேறு பிரச்சனைகளுடன் தங்களை நாடி வரும் பக்தர்களின் மனதை எப்படி மாற்றி அவர்களை நல்வழி படுத்துவார்கள் என்பதே என் கவலை
இருப்பினும் இதை விட தெரிந்தும் சிலர் மனிதர்களை சாமி என நம்புவது
என்னால் ஜீரணிக்க முடியவில்லை .அண்மையில் ஓஷோவின் ஒரு புத்தகம் வாசிக்க கிடைத்தது அவருடைய சில கதைகள் அதாவது ஜென் கதைகள் எனக்கு மிகவும் பிடித்து போயிட்டு .கடவுளை நம்புவதை விட உன்னை நம்புவது மிக சிறந்த து என அவர் கூறுகிறார். ஆனாலும் சில கருத்துக்களை என்னால் ஏற்க்க முடியவில்லை .

சரி நம்முடைய பூசாரி விடயத்துக்கு வருவம் இப்படியான விடயங்கள் இந்து மதத்தில் மட்டும் நடக்கும் சங்கதி இல்லை .எல்லா மதத்திலும் பரவிக்கிடக்கும் கதைதான் இது .ஆனாலும் தற்போது சூடாக விவாதிக்க படும் பொருள் என்பதால் நானும் இது பத்தி எழுத வேண்டியிருக்கிறது .

ஆனால் காமம் என்பதை நான் ஒரு போதும் விமர்சிக்க வில்லை .அது அவர் அவர் இஷ்டம் . எனக்கு ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது
கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்கு ஒரு கொடுமை தலையை விரித்து போட்டு நின்று ஆடுதாம் இந்த நிலைமைதான் மக்களுக்கு
வீட்டில் மாமியார் பிரச்சனை என்று கோவிலுக்கு போனால் அங்க சாமியார் பிரச்சனை .
திரிஷாவின் குளியலரை விடியோவுக்கு பின் ரூம்களில் கமரா தேடிய நாம் இப்போது கோவில்களுக்கும் கமர தேட வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகி இருப்பதுதான் பொறுக்க வில்லை .ஆனாலும் இப்படியான மனிதன்களை கடவுள்தான்!!!!!!!!!!!! காப்பாற்ற வேண்டும்..............................................................

கொழும்பு நகர தெரு


ஆயிரம் அடையாளங்கள் உள்ள தெரு
நான் வசிக்கும் தெரு

மட்டகுளியவில் உள்ள
அழகிய (அழுகிய )தெரு
நாளொரு (நாயொரு )வண்ணமும்
பொழுது ஒரு மேனியுமாய் (பூனையுமாய் )
வளர்த்து வந்த(வரும் ) தெரு

குப்பைகள் பலவிதமாய்
கிடைக்கிறது (கிடக்குறது )எங்கள்
தெருவில் .
எங்கள் தெரு பரு இருக்கும் முகம் போல்
மேடும் பள்ளமுமாய் கிடக்குறது .

எங்கள் தெரு மாநகர சபையின் செல்ல பிள்ளை போலும்
எது நடந்தாலும் கண்டு கொள்ள மாட்டர்கள்

நடைபாதைகளே அநேகரின் வீட்டு முற்றம்
சிலருக்கு கடையாகியும் போகும்
மழைக்கு குடை பிடிப்பதை விட
காகத்திற்கு குடை பிடிப்பதே
முக்கியம் .வெளியில் செல்லும் போது
பூனை குறுக்கருக்காது .
காகம் எச்சமிடும் ஒரு
மாதிரியான தெரு இது .

ஆடைகள் காயப்போடும் இடமாக
மாறிவிடும் இது .
அநேகரின் உள்ளாடைகள்
கூட கொடி கட்டி(காட்டி)பறக்கும் .

எங்கள் தெருவில் வசிப்பவர்கள்
அனைவருக்கும் தலை குனிந்து
மரியாதை கொடுக்க வேண்டும்
இல்லா விடின் உங்கள் தலை இருக்காது .
உடுப்பு காய போடும் கொடி
கழுத்தை வெட்டி விடும் .

எங்கள் தெருவுக்கு வருபவர்களே
தயவு செய்து உங்களுக்கு
மூக்கு இருப்பதை மறந்து
விட்டு வாருங்கள் .
ஆனால் கண்ணை வேண்டும் என்றால் இன்னும் இரண்டு
கடன் வாங்கி பின் பக்கம் வைத்து கொண்டு வாருங்கள்


Thursday, January 21, 2010

என்ன கொடுமை சார்

பதிவுலகத்துக்கு நடந்தது என்ன ?
ஆயிரத்தில் ஒருவன் இப்படி வருத்ததெடுக்கவடுவது ஏன் என்று புரிய வில்லை .
பிரபல பதிபவர்கள் தொடக்கம் ,என் போன்ற புதியவர்கள் வரை ஆயிரத்தில் ஒருவனை சற்று தொட்டு செல்கிறார்கள் .சிறிது நாட்களுக்கு முன் வேட்டைக்காரன் வேட்டியடினானோ இல்லையோ பதிவுலகதினை ஆட்டி படைத்து விட்டு ஓய்ந்தது .பதிவுலகத்தை வேட்டையாடியது எனலாம் .

ஆனாலும் அபாரமாக ஓடிக்கொண்டு இருக்கும் அவதாரை விட ஆயிரத்தில் ஒருவன் மிகவும் அதிகமாக பதிவுலகில் விமர்சிக்க படுகிறது .அது நல்ல மாதிரி யானதோ இல்லை மோசமான முறையிலோ எப்படியோ விமர்சிக்க படுகிறது .

வேகமாக வளர்த்து வரும் இணைய பாவனையில் இவ்வாறான எதிர் மறை விமர்சனங்கள் சினிமா வை தொழிலாக கொண்டுள்ளவரகளை பாதிக்கும் என்பது உண்மை .எது வேண்டும் என்றாலும் எழுதலாம் எப்பிடி வேண்டும் என்றாலும் எழுதலாம் .என்பதற்காக ஒரு படத்தைஇப்படி நார் நாராக கிழிக்க கூடாது.

எனக்கும் கூட ஆயிரத்தில் ஒருவன் பத்தி எழுதினால் நானும் பிரபல பதிவாளராய் மாறி விடுவோமோ என தோன்றுகிறது .

வேறு வழியாக பார்த்தல் நம்முடைய பதிவாளர்களுக்கு சரக்கு தீர்ந்து விட்டதோ எனவும் என்ன தோன்றுகிறது .ஆயிரத்தில் ஒருவன் படம் நல்ல படமோ இல்லை கூடாத படமோ என்னக்கு தெரிய வில்லை .நான் அந்த படத்துக்கு வக்காலத்து வாங்கவும் வரவில்லை .அதில் சில லாஜிக் மீறல்கள் இருக்கின்ரதுவும் உண்மைதான் .ஆனாலும் சில புது முயற்சிகள் வருய்ம் போது தோள் தட்டி வர வேர்க்க வெறுமே தவிர காலால் அதை தட்டி விட கூடாது என்பதே என் கருத்து .

ஆனாலும் அப்படத்தால் பொங்கலுக்கு வந்த மற்ற படங்கள் எடு படாமல் போனது ஏனோ உண்மைதான் தனுசின் குட்டி படம் கூட மிகவும் குறைவான பதிவுக்கே பயன் பட்டது .ஆனாலும் வேட்டைக்காரன் அளவுக்கு எதிர் மறை விமர்சனங்களை ஆயிரத்தில் ஒருவன் சந்திக்க வில்லை

.பதிபவர்கள் தாங்கள் உலக படங்கள் பார்பவர்கள் என்பதை வெளிக்காட்டுவதற்கு பல படங்களில் வந்த காட்சிகள் இப் படத்தில் இருக்கிறது என்று அடுக்கி விடுகிறார்கள் .
உதரணமாக கிலேடியாட்டேர் படத்தில் வரும் சண்டை காட்சி போன்றே
இறுதி சோழ பாண்டிய சண்டைக்காட்சி அமைந்திருக்கிறது .என கூறுகின்றனர் .அதுக்காக செல்வராகவன் A.K 45 கொண்டு சண்டை பிடிப்பதாய் காட்சி அமைக்க முடியுமா ?அரச சண்டை எனில் அம்பும் கேடயமும் பயன் படுத்த படும் அதை வைத்துதான் அவர் காட்சி அமைக்க முடியும் .

எனவே இன்னும் இன்னும் அப் படத்தினை விமர்சிக்காமல் வேறு ஏதாவது விடயத்துக்கு பதிவ்வளர்கள் திரும்பி விடுவார்கள் என்று நினைக்கிறேன் .
அப்பாடா நானும் ஒரு மாதிரி ஆயிரத்தில் ஒருவன் பத்தி எழுதிட்டன்Wednesday, January 20, 2010

எங்க வீட்டு மதில் சுவர்

சீட்டு காசில் கட்டியதால்
கொஞ்சம் கொஞ்சமாகத்தான்
கட்ட பட்டது .கம்பி வேலி சுகம் இதில் குறைந்து போனது
ஏனோ உண்மைதான் .

எங்க விட்டு உயரம குறைந்த அண்ணா கொஞ்சம்
உயர்ந்து போனான் எட்டி எட்டி வீதி பார்த்து
நாய்க்கும் சிறிது கோபம வந்து விட்டது .
வெளியில் போவதானால் கதவு மட்டுமே வழி.
ஒற்றை காலை உயர்த்தி கொண்டு
ஒன்றுக்கு போக தொடங்கியதூ நாய்
மதில் விழுந்து விடும் என்ற பயத்தில்

வருசத்துக்கு ஒரு தரம் எல்லோரும் சேர்த்து
வேலி திருத்தும் போது
அண்ணாவுக்கு கலியாணம்
அதான் வேலி திருத்துகிறோம்
என்று கலாய்க்க முடிய வில்லை .

அம்மாவுக்கும் ஒரு கவலை
வேலியில் நின்ற முருங்கை மரம்
வெள்ளி கிழமை முருங்கைக்காய்
எங்க வீட்டு மெனு வில் ஒன்று .
ஆனாலும் ஒரு கந்து
கிணற்றடியில் வீற்றிருக்கிறது.


அயல் வீட்டு அக்கா மல்லிகை
பூ பறிக்க இனி கதவு வழியாகத்தான்
வர வேண்டும் .அதிலும் ஒரு சிறு
கிளை தாம் செய்ய வேண்டி இருந்தது.

இனி பக்கவீடு அக்கா வளர்க்கும் கோழி
எங்க வீட்டு கிணற்றடிக்கு வராது.
மாடுகளும் இனி எங்கள் வீடுக்கு வராது
நாங்கள் தனித்து விட்டோம் .

ஏய் என் விட்டு மதிலே எங்களை
சிறை படுத்தியதாய் என்னாதே
பின்னேரங்களில் உன் முது மேல்தான்
நாங்கள் அரட்டை அடிக்க போகிறோம்
நண்பர்களுக்கு எல்லாம் சொல்லி விட்டேன் .
ஆனாலும் உனக்கொரு வேண்டுகோள்
மற்ற பக்கம் அம்மா நின்றால் சொல்லிவிடு .

இனி நீ அரசியல்வாதிகளை சுமக்க போகிறாய்
மாடுகள் வந்து அவர்களை கடித்து குதறும் வரைக்கும்
சில மரண வீடு அன்சலிகளும் உன் மடியில் தவழும் .

கார்த்திகை விளக்கிடு அன்று உன் முதுகில்
தீ வைக்க போகின்றோம் நாம் .
சனி விரததில் காக்கைக்கு சோறு நீதான் கொடுக்க போகிறாய்
நண்பர்களில் சைக்கிள்கள் கூட உன் காவலில் தான் .

என் வீடு பூக்கள் இனி எட்டிதான் பார்க்க
வேண்டும் என்னவள் வீதியால் சென்றால்
ஆகவே மதிலே உன்னிடம் மண்டியிடுகிறேன்
எப்படிவது அவள் போவதை எனக்கு சொல்லிவிடு .
என் அம்மாவுக்கு தெரியாமல் ..............................................
Tuesday, January 19, 2010

இந்த மாதத்தில் பார்த்த 3 படங்கள்
அவதார் ,பா ,ஆயிரத்தில் ஒருவன்

மேலுள்ள படங்கள் மூன்றும் நான் இந்த தையில் பார்த்த படங்கள் என்பதை விட பார்த்து சிலாகித்த படங்கள் எனலாம் .மூன்றும் வேறு வேறான கதைக்களங்கள் ;வேறு வேறான கதைக்கருக்கள்.


இது விமர்சனம் இல்லை .அது எழுத எனக்கு அறிவு போதாது என்று நினைக்கிறேன் .


வித்தியாசமான படம் என்று தமிழில் இயக்குனர்கள் .நடிகர்கள் எல்லாம் சொல்லி விட்டு பின்பு அதே பழைய பழி வாங்கும் பல்லவியை (வில்லனை மட்டும் அல்ல நம்மளையும் சேர்த்து )எடுத்து விடுவார்கள் .


ஒரு திரில்லர் கதை ,விஞ்ஞான புனை கதை போன்ற கதைகளில் எனக்கு அதிக ஆர்வம உண்டு.ஆனாலும் அவதார் என்னை இருக்கையில் கட்டிப்போட்டு விட்டது .இருக்கையில் நுனிக்கு வந்து பார்க்க வைத்தது (இங்கிலீஷ் விலங்கல்ல அதான் முன்னுக்கு வந்து காது குடுத்து கேட்ட )உண்மையில் முழுவதும் கற்பனை கலந்த கிராபிக்ஸ் படம் .நமக்கு தெரிந்த சில உயிரினங்கலையே இன்னும் வேறு விதமாக காட்டி அசத்தியிருக்கிறார் கமறுன் .
குதிரை ,பருந்து என்பனவற்றை அவருடைய கற்பனைகுதிரையினை தட்டி நமக்கு விருந்து கொடுத்திருக்கிறார்.
எனக்கு பிடித்த விடயம் அப் படத்தில் புதிதாக வேறு விதமான ஒரு உயிரினத்தையும் உருவாக்காமல் நமக்கு தெரிந்த உயிரினங்கள் ஆகட்டும் ,தாவரங்கள் ஆகட்டும் (தொட்டசுறுங்கி ,காளான் ,ஆலமரம் )போன்றவற்றை இன்னும் கொஞ்சம் உருவகப்படுத்தி
எல்லா மக்களுக்கும் புரியும் படி பண்ணியிருப்பது .கதை என்பதை விடுத்து பிரமாண்டம் என்பதை அதிகப்படுத்தி அதான் மூலமாகவே படத்தினை கொண்டு செல்லும் திறமை சிலருக்கு தான் வரும் அதில் அவர் உயரத்தில் இருக்கிறார் உதாரணம் ஜுராசிக்க் பார்க்,டைட்டானிக் படங்கள் .தமிழில் இப்படி படம் எடுக்கும் கலை சங்கர் ஒருவருக்கு மட்டும் தெரியும் எனலாம் .

அடுத்து பா
சிவாஜி என்கிற கலைஜனை கடைசிக்காலத்தில் பாழாக்கி விடார்கள் தமிழ் சினிமா துறையினர் .அமிதாப் தனது அடுத்த முத்திரையை பதித்து விட்டார் .இது ஒரு மாதிரியான கதை . நமது கஜனி படம் போன்ற கதை ,அபிசெக்கே க்கும் ;படத்தில் இருக்கிறார் ,ஆனாலும் அமிதாப்பே படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் .கமல் மட்டுமே எனக்கு தெரிந்து எப்படி சோதனை முயற்சிகளில் ஈடுபடுவார்.அமிதாப் அழகிய முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் .இது ஒரு ஜதார்தமான கதை (கஜனியில் குளோனிங் அப்பிடி என்று கூட சில காட்சிகள் இருக்கும் )படம் ஆரம்பித்ததும் முடிவதும் தெரியாமலே போகும் .படம் முடிந்து வெளியில் வரும் போது நெஞ்சம் எதோ கனத்து போவது மட்டும் உண்மை .இறுதியாக ஆயிரத்தில் ஒருவன்


காதல் கொண்டேன் ,7 g போன்ற அழகிய படங்களை தந்த செல்வா என்ன புதிதாக பண்ணியிருப்பார் என்று நினைத்து தியேட்டர் சென்றால் அவருடைய பழைய இமேஜ் எங்கோ போய் புதிதான ஒரு இமேஜ வரும் படி செய்து விட்டார் செல்வா

அவருடை அதே ஒரு A தனமான நடை படம் முழுவதும் தொடந்தாலும் பெரிதாக தெரிய வில்லை .தமிழ் படங்களில் தரம் இப்போது கஊடிக்கொண்டு செல்லுகிறது என்பதட்ட்கு இப்படமும் ஒரு உதாரணம் .நாம் இப்போது பதினாறு வயதிளினே பத்தி பேசுவது போல இன்னும் இருபது வருடங்களின் பின் ஆயிரத்தில் ஒருவன் பத்தி பேச போவது நிட்ட்சயம் .


இதில் கதைக்களம் இரண்டு காலங்கள் நிகழ்காலம் ,இறந்த காலம் என மாறு பட்டிருக்கிறது
அதை அழகான முறையில் கோருத்து அதில் வெற்றியும் கண்டு இருக்கிறார் செல்வா .
டிஸ்கி ; கமருன் 5 கலியாணம் முடிச்சவர்குறிப்பு ;ஜுராசிக்க் பார்க் கமரூன் எடுக்கல்ல மன்னிக்கவும்
aliens,போன்ற பிரமாண்ட படங்கள் எடுத்தவர் .மேலதிக விபரம்

Monday, January 18, 2010

மீண்டும் இயற்கையிடம் தோற்ற மனிதம்


இன்னுமொருகோர
முகம் காட்டி சிரிக்கிறது
இயற்கை

கேய்ட்டி பலரும் அறியா பெயர்
இப்போ உலகம் அறிந்த பெயர் .
நிலநடுக்கம் என்ற பேரில் வந்த
அழிவு .

இரண்டரை இலட்சம்
பணம் அல்ல உயிர்
ஒரு நிமிடத்தில் .
பறந்து போய்ட்டு

உணவு அருந்திய மாதிரி பலர்
உறங்கிய மாதிரி பலர்
வேலையில் பலர்
சாலையில் பலர்
எல்லோரும் இப்போது
அடங்கி விட்டனர் .
ஒன்றாய் மண்ணுக்குள் .

முன்பொரு நாள் கடல்
குடித்தது பல உயிர்
இன்று நிலம் விளுங்கியிருக்கிறது
லட்ட்சம் உயிர் .
போதும் தானே உனக்கு .

பிழைதான் நாங்கள்
உன்னை நன்றாக வைத்திருக்க வில்லை
இயற்கையே .
அதுக்கா இந்த தண்டனை

இறந்தால்4 பேர் தூக்குவதற்கு வேண்டும்
என்பார்கள்
எங்கே போய் நாலு பேரை தேடுவார்கள்

நமக்கு நடந்தால் கொடுமை .
மற்றவர்க்கு நடந்தால் செய்தி
அப்பிடியா மக்களே !

இயற்கையை சபிப்பதை விடுத்து
மக்களுக்காக கடவுளிடம்
வேண்டுவோம் (கடவுள் என்பவர் இருந்தால் )

Wednesday, January 13, 2010

இழந்த 27000 உயிர்கள்

நமது மதிப்புக்குரிய !!!!!!!!! பாதுகாப்பு செயலளார் (பண பாதுகாப்பு இல்ல நாட்டுக்கு பாதுகாப்பு ) கோத்தாபாய ஒரு பேட்டியில் தெரிந்தோ இல்லை தெரியாமலோ சொல்லி விட்டார் இழந்த இராணுவ வீரர்கள் அதுவும் கடைசி நேரத்ததில் 27000 என்று .

மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்


நீங்கள் IGA game விளையாட எங்கள் உயிர் தான் கிடைத்ததோ !
எங்கள் வாழ்கையை edit செய்வதாய் நினைத்து delete செய்து விட்டீர்கள் .
தயவு செய்து நல்ல recovery software ஒன்றை தாருங்கள் .
எங்கள் உடைமைகளையாவது திரும்ப பெற .
photoshop இல் மெருக்கூட்ட பட்ட படமாக
எங்கள் வாழ்கையை வெளி உலகுக்கு
காட்டதிர்கள் .
எங்கள் வாழ்வு virus அடித்து போய் கிடக்கிறது.
antivirus வாங்க சொல்லி தரும் காசுகளை
hide பண்ணி விடாதிர்கள் .
முன்பெல்ல்லாம் எங்கள் hard disk இல்
not enough memory என்று வரும் .
இப்போது இடம் இருந்தும் இருக்க
file இல்லை .
எங்களை தனியாக partition பண்ண மாட்டிர்கள்
என்று எங்களுக்கு தெரியும் .
இனி அவ்வாறு வேண்டாம் .
அப்படி செய்ய போய் பட்ட அழிவுகள்
எங்களுக்கு நன்றாகவே தெரியும் .
நீங்கள் virus என்று நினைத்து
பிடித்து வைத்திருக்கும் எங்கள் file களை
விட்டு விடுங்கள் .


Tuesday, January 12, 2010

எங்களுக்கு இது தேர்தல் காலம் ஆகவே மக்களே !!!!!!!!

இலங்கை என்பது எம் தாய் திருநாடு ;எ.ஈ மனோகரன் அண்ணன் பாடல் ஒன்று ஒலித்துக்கொண்டு இருக்கிறது .

நினைத்துப்பார்க்கிறேன் .எம் தாய்நாடு என்பதைப் பற்றி;

வருசத்துக்கு ஒரு தரம் வரும் ஊர் கோவில் திருவிழா போல் ஆகிவிட்டது.
எங்களுக்கு தேர்தல் .இந்த வருஷம் கொடியேற்றம் ஆரம்பித்து விட்டது.
நடை பெறுகின்றன பூசைகள் விமர்சையாய்.

எய்தவனும் ,அம்ம்பும் போட்டியில் யாருக்கு தண்டனை தர போகிறிர்கள் தமிழர்களே? .
நாம் தமிழர்கள் பெருமை மட்டுமே பட்டுக்கொள்ள முடிகிறது .இந்த
நாட்டில்  வேறென்ன செய்ய முடியும் எங்களால் .

விதி என்று பொய் சொல்லவும் விருப்பமில்லை .
முன்னோர் விட்ட தவறு என்று பழி போடவும் விருப்பமில்லை .

முக்கனாம் கயிறுகள்  மாற்றப்படுவதால் மாடுகளின்
அடிமைத்தனம் விலக போவதில்லை

போதும் நம்நிலை
மற்றவர்கள் நிலை பாவம் .

ராமனோடு வந்த மந்திகள்
இன்னும் இந்தியா திரும்ப வில்லை போலும் .
தாவிக்கொண்டு இருக்கின்றனர் .
கட்ட்சிக்கு கட்ட்சி .

தல யா தளபதியா இதுதான் இப்போது பிரச்சனை
தமிழ் சினிமா இல்லை .நம் தேர்தல்

தலைக்கு ரௌடிகள் அதிகம் .
தளபதிக்கு ரசிகர்கள் அதிகம் ;.
புதிதாக அரசியலுக்கு வந்தவர் தளபதி.
பழம்  தின்றவர் தல

காட்டி கொடுப்பது நம் புத்தி (மன்னிக்கவும் அப்பிடிதான் வருகிறது எனக்கு )
ஆனால் இருவரும் சேர்ந்து நாட்டையே காட்டி கொடுக்கிறார்கள் .

பெருச்சாளிகளை விட்டில் தங்க வைத்து விட்டு
மனிதர்களே நீங்கள் வளையில் தங்கப் போகிரிர்களா

கவனமாய் இருங்கள் வாக்காளர்களே
கோவணத்தை கழற்றி கட்சி கொடி ஏற்ற நினைக்காதிர்கள்.
வாக்குறுதிகள் உங்களுக்கு இனாமாக வழங்கப்படும் .
உங்கள் வாக்குகள் புடுங்கப்படும் வரை.

அரசியல் உண்மையில் ஒரு சாக்கடைதான் அங்கேதான் ஊழல் பெருச்சாளிகள் உலவிக்கொண்டு திரிகின்றன

கவனம் வீட்டுக்கு வரும்
வேடபாளருடன் கை குளுக்கியவுடன்
கையை பாருங்கள் மோதிரம் இருக்கிறதா என்று.

உங்கள் வரிப்பணமே துண்டுப்பிரசுரமாய் மாறி
உங்களிடம் வந்து சேருகிறது
.வழங்கிய வாக்குறுதிகளை தண்ணீரில் போட வேண்டாம்
சாயம் வெளுத்து விடும் .

வாக்குகளை வேட்டையாட புறப்பட்டு உள்ளார்
தளபதி .வேட்டை காரன் போல .
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் .பழமொழி தெர்யுமா மக்களே

மீண்டும் சொல்லுகிறேன்
கோவணத்தை கழற்றி கொடி
ஏற்ற கொடுத்து கொண்டு
ஒற்றை கையால் நிர்வாணத்தை
முடிக்கொண்டு மற்ற கையால்
ஓட்டு போட போகும் மக்களே
சிந்தியுங்கள்.............................


டிஸ்கி


ஒரு அழகிய பாஸ் போர்ட் 


Monday, January 11, 2010

நகரத்து பிரமச்சாரி

 அவனுடைய எண்ணங்கள் போலவே சிதறி கிடக்கின்றன புத்தகங்கள்
.கண்ணாடியும் தொலைபேசியும் வந்த புதிதிலே தோழனாகி போய்விட்டனர்
புத்தகம் வாசிக்கும் நேரத்துக்கும் கண்ணாடி பார்க்கும் நேரத்துக்கும் போட்டி வைத்தால் ஆமையும் முயலும் மாதிரிதான் போகும் .


அழிந்து போன ketpad ,அவனின் sms அறிவை சொல்லும்
கிழிந்து போன துவாய் அவனின் குளியல் கணக்கை சொல்லும்
திறக்காத ஜன்னல் ,தட்டாத தூசு அவனின் சோம்பலை சொல்லும்
கழுவாத படுக்கை விரிப்பு அவனின் சுத்ததினை எடுத்து இயம்பும் .

ஆக மொத்ததில் அவன் ஊர் விட்டு படிக்க வந்த ஒரு பிரமச்சாரி.


தொலைபேசி bill கட்டி வணிகம் படிப்பார்
சோடா மிக்ஸ் பண்ணி கெமிஸ்ட்ரி படிப்பார்
ரோடு சுத்தி சமூகவியல் படிக்கும் இவன்
உண்மையில் ஒரு பிரமச்சாரி


கோதுமை மா ஏந்த ஒரு வகையில் ஆவது காலை உணவாகி போகும்
மதிய உணவின் போதுதான் அம்மாவின் நினைவு வந்து போகும்
இரவுக்கு கொத்து இயல்பாகி போனதொன்று.காதல் இவனுக்கு எட்டாக்கனி
கண்டதும் காதல் வந்து விடும் இவனுக்கு.
ஈ .மெயில் அட்ட்ரசில் அவள் பெயரும் இணைக்கப்படும்.
பாஸ் வோர்ட் அவள் பேர்தான்.


கம்பசுக்கு போன நாளை விட தியேட்டருக்கு போன
நாளே கூட இருக்கும் இவன் டயரியில் .
ரிப்பிட் எக்ஸாம் தான் இவன் முதல் அமர்வு.
மெரிட் எட்டாக்கனி இவனுக்கு.அவனுடைய காதல்
போலவே.மாலை நேரம் netcafe குடியிருக்கும் கோவிலாக போகும் .
முன்சிப்புத்தகம் (face book ) இவரின் நண்பன்.
ட்விட்டர் இவனுக்கு தம்பி.
கவிதைகள் எனும் பேரில் கண்டதையும்
கிறுக்கி இணையத்தில் உலாவ விடுவார்.
இவனின் கணணி நீலப்படத்தினால்
நிரம்பி இருக்கும் .


மது அனுபவித்த ஒன்று .
மாது அனுபவிக்க துடிக்கும் ஒன்று
எந்த தியேட்டரில் என்ன படம்
இவனுக்கு அத்துப்படி .
மத்தபடி விசேசம் பெரிதாய் இல்லை
இவனின் வாழ்வில்


எதிர்காலம் இவனை ஏற்கும் என்ற
நம்பிக்கை நன்றாக இருக்கிறது இவனுக்கு.

டிஸ்கி

Richest Countries in the World

 CountryGDP per capita
10.

San Marino

$46,100
9.

Ireland

$47,800
8.

United States

$48,000
7.

Singapore

$52,900
6.

Brunei

$54,100
 
5

Norway
$57,500
4.

Kuwait
$60,800
3.

Luxembourg
$85,100
2.

Qatar
$101,000
1.

Liechtenstein
$118,000