Friday, October 8, 2010

குழந்தையும் என் காதலும்

ஏதோ மிட்டாய்
வாங்க போயிருக்கும்
அப்பாவை எதிர் பார்த்து
நிற்கும்  குழந்தை போல்
உன்னை  எதிர் பார்த்துக்கொண்டே
இருக்கிறது என் காதல் ............


Tuesday, October 5, 2010

எந்திரன் அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ் ரேட்டிங்கில் உண்மையில் முதலிடமா ?

எனக்கு ஒண்ணுமே புரியல்ல !!எல்லோரும் இஷ்டத்துக்கு எந்திரன் பத்தி எழுதி தள்ளி கிட்டு இருக்காங்க .நானும் பார்த்தன் இனி தமிழ் படங்களில் இப்பிடி ஒரு பிரமமனடான படம் வராது என்றே தோன்றுகிறது (சங்கர் இருக்கும் வரை சொல்ல முடியாது கூடவே சன் பிக்ஸர்ஸ் சேர்த்து கொள்ளுங்க ).
எல்லோரும் இந்த பாக்ஸ் ஆபீஸ் பத்தி சொன்னங்க சரி நானும் அங்க பொய் என்ன நடக்குது எண்டு பார்த்தன்

எந்திரன் பற்றிஒண்ணுமே இல்லியே
இத பாருங்க

http://www.imdb.com/boxoffice/ இந்த லிங்க போய்(பொய்) பாருங்க

சரி இதுக்கும் போய் பாருங்க
http://www.boxoffice.com/
September

USA Box Office Estimates
for the weekend starting 2 October 2010RankWeekend TotalWeeksScreensWeekend screen avg.Cumulative
box office
1. The Social Network (2010)
$23,000,000 (%) 1 2,771 $8,300 $23,000,000
2. Legend of the Guardians: The Owls of Ga'Hoole (2010)
$10,855,000 (-33%) 2 3,575 $3,036 $30,047,000
3. Wall Street: Money Never Sleeps (2010)
$10,100,000 (-47%) 2 3,597 $2,807 $35,875,851
4. The Town (2010)
$10,000,000 (-36%) 3 2,935 $3,407 $64,307,000
5. Easy A (2010)
$7,000,000 (-34%) 3 2,974 $2,353 $42,428,000
6. You Again (2010)
$5,552,000 (-34%) 2 2,548 $2,178 $16,437,000
7. Case 39 (2009)
$5,350,000 (%) 1 2,211 $2,419 $5,350,000
8. Let Me In (2010)
$5,300,000 (%) 1 2,021 $2,622 $5,300,000
9. Devil (2010)
$3,671,720 (-44%) 3 2,392 $1,535 $27,399,125
10. Alpha and Omega (2010)
$3,000,000 (-37%) 3 2,303 $1,302 $19,020,000
Tuesday, September 28, 2010

மீண்டும்மீண்டும் என் காதலிக்கு

எப்போதெல்லாம்
உன்னை
நினைக்கின்றேனோ
அப்போதெல்லாம் ஒரு கவிதை
என்  மனதில் உட்காந்து கொள்கிறது ...

பொய் என்றால் என்
பேனாவை கேட்டு பார்
உன்னை பற்றி எழுதும்
போதெல்லாம் வெக்கத்தால் அது
நீல நிறமாய் பூத்து போவைதை ...

இனிப்பை தேடி
போகும் எறும்பு போல
உன்னைநோக்கியே
என்  இதயம்
பயணப்பட்டு கொண்டிருக்கிறது .

எனக்கு தெரியும்
உன்னை காதலிப்பது என்பது
என்னை நானே தூக்கிலிட்டு
கொள்வது போலாகும் ..

Monday, September 27, 2010

மழைக்கால காதல்மழை வரும்
முன்பு  தோகை
விரிக்க தொடங்கும்
மயில் போல நீ
பாதையில் வரும் போதே
என் இதயம் ஆர்ப்பரிக்கிறது.

மழைகாலபேரு வெள்ளத்தில்
ஓட்டு மொத்தமாய்
அடிபட்டு போகும்
சிறு துரும்பு போல்
உன் புன்னகையிலே
மொத்தமாய்
விழுந்து  போகின்றேன் .

உன் குடையினை
செய்தவனை கவனமாய்
இருக்க சொல்
கொலைவெறியுடன்
தேடுகிறதாம் மழை .

உன் கை நனைக்கக்
மழைத்துளிகள்
போட்டி போடுகின்றனவாம்
யாருக்கதான் ஆசை
வராது  உடல் பட்டு
வீழ்தால் முத்தாக மாறும் என்றால் ...

Wednesday, September 8, 2010

பதிவு போட மேட்டர் தேடுறிங்களா? இங்க வாங்க

ஆமா எல்லோருக்கும் இருக்கிற ஒரு பிரச்னை இது எத பதிவு போடுற .நானும் அப்பிடி இப்படி எண்டு தேடி ஒரு நல்லதேர்வை கண்டு புடிச்சு இருக்கன .கிழே  ஒரு லிங்க் ஒன்று தந்து இருக்கான் அங்க போய் பாருங்க ஒருஐடியா தந்து இருக்காங்க இதுதான்

Tuesday, September 7, 2010

கோழி இறைச்சி உண்ணும் போட்டி ........இவர்தான் வின்னர்


Sonya Thomas  இதுதான் அந்த பெண்ணின் பெயர்  .போட்டி ஏற்பாட்டாளர்களின் தீர்ப்பின் படி அவர் வெறும் 12 நிமிடங்களில் 181 இறைச்சியை உண்டு சாதனை !!! படைத்துள்ளதாக சொல்லி இருக்கிறார்கள் .இவர் ஒரு பத்திரிகையில் நிருபராக இருக்கிறாராம் .எட்கனவே நான்கு முறை இந்த போட்டியில் ஜெயித்திருக்கிரார்மாம் .மொத்தமாக 4.86 பவுண்ட்ஸ் நிறை உள்ள இறைசியை தீர்த்து கட்டியுள்ளார் அவரு ,இரண்டாவதாக வந்தவர் 4.46 பவுண்ட்ஸ் உண்டிருக்கிறார்.இந்த பெண்மணி 2005 ள் நடந்த போட்டியில் 174 இறைச்சி உண்டு படைத்த சாதனையை முறியடிதுள்ளர்..இந்த போட்டி முடிந்து அவர் வென்ற பின் அவரிடம் பார்வையாளர்களிடம் சொல்லி இருக்கிறார் .எனக்கு இப்போதும் பசிக்கிறது என்று .

அந்த  பொண்ணு கலியாணம் முடிக்க மாப்பிளை தேடுதாம் யாரும் போறிங்களா????????????????????///

Monday, September 6, 2010

மறைந்த இளவரசி டயானாவின் மரணசடங்கு நினைவு நாள் ஒரு வீடியோ அலசல்

1997 sep 06 இது இளவரசியாய் இருந்து மறைந்த டயானா வின் மரண சடங்கு நடை பெற்ற தினம் .நாமும் ஒரு முறை நினைவு மீட்டி பாப்போம் .

other came next post

A இலிருந்து Z வரை பூமியின் படங்கள்

கூகிள்வரைபடம் பற்றி எல்லோருக்கும் தெரியும் .அதில் இருந்து பெரும் பெறுமதியான விசயங்கள் பற்றியும் நமக்கு தெரியும் .
இது கொஞ்சம் வித்தியாசமாக abcd  காதுக்க போற ம் .

சரி வாங்க படிக்கலாம்

சரி இதுக்கு எல்லாம்தொடுப்பு தாரன் பார்த்துக்குங்க .


இதாங்க A
A 
இதுதான் B
B 

இதுதான் C
C 

இதுதான் D
D 
பார்துகிடிங்களா சரி இனி என்ன வோட்டு போடுங்கTuesday, August 24, 2010

கடந்த 20 வருட உலக அழகிகளின் பட அணிவகுப்பு

அப்பிடினா இதுக்கு கிழே இருக்கிற படங்கள் ஆமாங்க கடந்த காலங்களில் நடை பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற அழகிகளின் படங்கள் இவை 


 1. Kaiane Aldorino – Miss World for 2009, Gibraltar 
 2. Ksenia Sukhinova – Miss World for 2008, Russia
 3.  Zhang Zilin – Miss World for 2007, China 
 4. Taťána Kuchařová – Miss World for 2006, Czech Republic 
 5. Unnur Birna Vilhjálmsdóttir – Miss World for 2005, Iceland 
 6. María Julia Mantilla – Miss World for 2004, Peru 
 7. Rosanna Diane Davison – Miss World for 2003, Ireland 
 8. Azra Akin – Miss World for 2002, Turkey 
 9. Agbani Darego – Miss World for 2001, Nigeria 
 10. Priyanka Chopra – Miss World for 2000, India 
 11. Yukta Mookhey – Miss World for 1999, India 
 12. Linor Abargil – Miss World for 1998, Israel 
 13. Diana Hayden – Miss World for 1997, India 
 14. Irene Skliva – Miss World for 1996, Greece 
 15. Jacqueline Aguilera – Miss World for 1995, Venezuela 
 16. Aishwarya Rai – Miss World for 1994, India 
 17. Lisa Hanna – Miss World for 1993, Jamaica
 18. Julia Alexandrovna Kourotchkina – Miss World for 1992, Russia
 19. Ninibeth Beatriz Leal Jiménez – Miss World for 1991, Venezuela 
 20. Gina Marie Tolleson – Miss World for 1990, United StatesMonday, August 23, 2010

பற்பசை இல்லாமல் சூரிய சக்தியால் இயங்கும் பல்தூரிகை

Dr. Kunio Komiyama இதுதான் இந்த பல்தூரிகையை கண்டு பிடித்த பல் மருத்துவரின் பெயர் (தமிழில் மொழிபெயர்க்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது ).பதினைந்து வருடங்களுக்கு முன்பு தற்போது பாவிக்கப்படும் பல்துரிகை வடிவினை உலகுக்கு வடிவமைத்து கொடுத்தவர் .
University of Saskatchewan இந்த பல்கலை கழகத்தில்  பேராசிரியராக கடமை புரியும் இவர் தன்னுடன் கடமை புரியும் ஜெர்ரி உடன் இணைத்து இந்த ஆராய்சியில் ஈடு பட்டிருந்தார் .

இவர்களின் இந்த கண்டு பிடிப்புக்கு உறுதுணையாக ஜப்பானின் சக்ஸ்கேன் கம்பனி இருதிருக்கிறது .
Soladey-J3X என பெயரிடப்படிருக்கும் இந்த பல்துரிகை மிக விரைவில் சந்தைக்கு வர இருப்பதுடன் .ஆயிரம் இளவயதினறேடியே சோதனைக்கு உட்படவும் இருக்கறது .இனி இந்த கண்டுபிடிப்பின் செயல்பாடு பற்றி இனி பார்போம் .தூரிகையின் மேல் பகுதியில் உள்ள சோலார் தட்டின் முலம் உருவாகும் எலோற்றோன்கள் ( electrons )தூரிகையின் முனைவு பகுதியில் உள்ள  ஈயதினால் ஆனா வயர்(wire ).இந்த electronsபற்களில் உள்ள அமிலங்களுடன் இரசாயன ரீதியில் தாகம் புரிந்து அங்கிருக்கும் பக்ரிடியா ,மற்றும் கிருமிகளுடன் தாக்கம் புரிந்து அவற்றை எதிர்க்கிறது .
ஆக இந்த பல்துரிகைக்கு பற்பசை தேவையில்லை என்பது முக்கிய தகவல் .சாதரனமாக ஒரு சூரிய சக்த்யில் இயங்கும் கால்குலேட்டர் ஒன்றின் சக்தி போதும் இது இயங்கும் ..

Friday, August 20, 2010

குருக்களுங்கோ குடுத்துடுங்கோ காச!!!!!!!

அட பயப்படாதிங்க இது அந்த கருவறைக்குள்ள கசமுசா நடத்திய காமுக குருக்கள் பற்றிய கதை இல்லை .அத விட கொஞ்சம் பரவால்ல என்கிற இடத்தில இருக்கிற ஆக்கள் பத்திய கதை  .இது ரெண்டு மூண்டு நாளைக்கு முதல் ஒரு கோவிலில் நடந்த சம்பவம் .

இந்த படத்தில இருக்கிரவருக்கும்  மேட்டருக்கும் சம்பந்தம் இல்லிங்கோ ...........


ஒரு கோவில் பேரு ஊர் எல்லாம் வேணாமே !.கர்ப்பூர தீபம் சாமிக்கு காட்டிய பின் அதை எடுத்து சாமி கும்பிட வந்தவங்களுக்கு காட்ட பெரிய குருவின் உதவிக்குரு ஒருவர் எடுத்து கிட்டு வந்தாரு .அப்ப அத எல்லோரும் தொட்டு கும்பிட்டு விட்டு பத்து ரூவா ,இருபது ரூவா இல்லாட்டி ஐம்பது ரூவா அந்த தட்டில போடுவாங்க .(அட தட்டுல போட்டந்தான் கடவுள் கேக்கிற எல்லாத்தையும் குடுப்பபரு .,இதில ஒரு பகிடி இருக்கு முதல் முதல் தட்டுல காசு போடுறது குருக்களின் சொந்த காரனாதான் இருக்கும் .அவன் போட்டு காட்ட எல்லோரும் தடுல காசு போடுவாங்க அவனுக்கு அதுல ஒரு கொமிசன் .நம்ம மக்கு சனம் இத விளங்காம என்னமோ அவங்க போடுற காசு நேரடியா பிள்ளையாரே எடுத்துக்கிற மாதிரி நினைச்சு போடுவாங்க .).சரி அங்க நடந்த விசயத்துக்கு வருவம் ஆக்கள் காசு போடுகிட்டு இருக்கும் போது அந்த உதவி குரூ பெரிய குருக்கல்ல பார்த்துகிட்டே அந்த கற்பூர தட்டில இருக்கிற கொஞ்சம் பெரிய தொகை காச எல்லாம் எடுத்து தண்ட இடுப்பில மறைச்சு வைக்கிறான் .அவனுக்கு குருக்கள் பார்க்க கூடாது அது மட்டும் தான் மத்தவங்க பார்கிறார்கள் அப்பிடி எண்டெல்லாம் இல்லை .அப்பத்தான் காசு போட்டவங்க ஜோசித்து இருப்பாங்க .

பொதுமக்களே  இது சும்மா டைலர் தாங்க மெயின் பிக்சர்ஸ் நீ இன்னும் பார்கல என்கிற ரேஞ்சில இன்னும் பெரிய கேவலங்கள் எல்லாம் இருக்கு .போலி சாமி ஒரு பக்கம் இருக்க இந்த குருக்கள் மாரின் கொடுமை .


சினிமா  நடிகர்மாதிரி அவங்க பேருக்கு முன்பு  அடைமொழி எல்லாம் வைச்சுக்க ஆரம்பிச்சிருக்காங்க அப்பா அவங்க .உதாரணமா ஆசாரியா ஜோதி ,ஆபரண ஜோதி (இது கழுத்தில அதிக தங்க மாலை போட்டு பூசை முடிக்கும் குருக்களுக்கு குடுக்குற பேரு ),இன்னும் இருக்கு கிரியா அப்பிடி எண்டு தொடக்கி ஒரு ஆயிரம் பேரு வச்சிருப்பாங்க .எனக்கு ஒன்னு தெரிசாகனும் எந்த யுனிவர்சிட்டி இந்த பட்டங்க குடுத்தனுப்புகிறாங்க எண்டு .இதுல ஒரு பெரிய பண விஷயம் இருக்கு யாருக்கு கூட பாடம் இருக்கோ அவருக்கு கொஞ்சம் பெரிரிரிரிரிரிரிய அளவில தட்சனை குடுக்கனுமாம் .
ஆமா  யாருங்க அவன்களுக்கு சர்மா பட்டம் குடுக்குறது .ஆனாலும் அந்த சர்மா என்கிறது அவங்க பேரோட சேர்த்தா உண்மையாவே ஒரு குருக்கள் பேரு மாதிரிதான் நமக்கும் தோணுது .பின்ன இருக்கிறதா நம்ம சனங்க பேரூ ,விளம்பரம் இத பார்த்துதான் எல்லாம் செய்யிற ஆக்கள் ஆச்சே.ஆமாங்க கோவிலுக்கு சனம் வர வேணுமின்னா கொழும்பில இருந்து குருக்கள் வரவேணும் .இல்ல இரவுக்கு ஒரு பெரிய பிரபல்யமான இசைக்குழு பாட்டு படிக்கணும் .

இவங்க  எல்லாம் ஒழுங்கு முறையாக குருவுக்கு படித்து இருப்பார்கள என்று தேடி பார்த்தல் அனேகமா இல்லை என்றுதான் பதில் வரும் எண்டு நினைக்கிறேன் (அட இதெல்லாம் போயா கூகிள்ல தேடி பார்ப்பாங்க ).உண்மைய சொன்னா எதோ மோட்டர் பைக் திருத்தும் மெக்கானிக் கடையில் வேலைக்கு நிக்கும் பையன் கொஞ்சம் பெரியவன் ஆனதும் தனிய ஒரு கடைய தொறந்து தானும் பாஸ் ஆகிரதில்லையா !! அது மாதிரிதான் இந்த மேட்டரும் வந்துகிட்டு இருக்கு அப்பிடி எண்டு நினைக்கன் .(உண்மையா குருக்க்கு படிச்சு வந்தவன்களே மன்னிசிடுங்க ..)

சரி  ஒரு கோவிலில் எப்பிடி எல்லாம் குருக்களுக்கு வருமானம் வருகுது எண்டு பாப்போம் (அட பெரிய ஆராய்சி பண்ணி இருக்காரு )இது எங்க நாடு கணக்கு அர்சனை,தானம் ,தட்சனை  என லிஸ்ட் ரொம்ம பெரிசு .இத விட அவருக்கு மாத சம்பளம் எல்லாம் இருக்கு (பென்சனும் கேப்பாங்க போல இருக்கு ).தட்சனைக்கு காசு ,பட்டு வேட்டி  தானத்துக்கு அரிசி ,மரக்கறி ஏன் விட்டா   டி குடிக்க பால்மா தேயிலை எல்லாம் கேப்பாங்க போல .இது ஒரு பூசைக்கு திருவிழா அப்பிடி எண்டா பார்க்கவே வேணாம் .சும்மா மூன்று நாலு குருக்கள் பூசை செய்வாங்க ஆனால் தானம் குடுக்கிற நேரத்தில அது ஆறு ஏழா கூட சில நேரம் மாறக்கூடும்.
இதெல்லாம் விட பெரிய விஷயம் பெரிய மோட்டார்பைக் இல்லாம பூசைக்கு அவங்க வெளிக்கிட மாட்டங்க .அப்பத்தான் ஒரு கோவில பூசை முடிஞ்ச பிறகு அடுத்த கோவிலுக்கு ஸ்பீடா போயி அடுத்த பூசை பண்ண முடியும் .இதில ஒரு பகிடி இருக்கு ஒரு கோவிலில் பூசை முடிஞ்ச பிறகு வேட்டிய மாரத்தி டெனிம் ஒன்ன்டு போட்டு கிட்டுதான் அவங்க சில நேரம் அடுத்த கோவிலுக்கு போவாங்களாம் .இன்னும் நிறை ய இருக்குங்க சொன்னா இன்னிக்கு வெள்ளிகிழமை கோவில்ல பிரசாதம் கூட தரமாடங்க ........

Wednesday, August 18, 2010

தலைமுடி வெட்ட வாரீங்களா ?

ரொம்ம நாளாச்சு தலைமுடி வெட்டி எங்காச்சும் போய் வெட்டி வருவம் அப்பிடி எண்டு போட்டு பைக் (கவனிக்க நான் ஒரு பைக் வைச்சிருக்கன். ) எடுத்து கிட்டு ஊருக்குள்ள இருக்கிற சலூன் எல்லாம் போய் பார்த்தன் .ரெண்டு மூண்டு சலூன் இருக்கு இருந்தாலும் அங்க ஓவரா கிரவ்ட் நிக்குது .முடியே வெட்ட வேணா அப்பிடி எண்டு போட்டு வீட்டுக்கு வந்து நம்ம லேப்டாப்பை தொறந்தா (இதையும் கவனிக்க நானு லேப்டாப் வச்சுருக்கேன்).அங்க போயி எப்பிடி முடி வெட்டிக்கலாம் அப்பிடி எண்டு தேடி பார்த்தன் .அட இதெலாம் தேடி பார்பான்ன்களே அப்பிடி எண்டு யோசிகிரிங்க .எண்ண பண்ணுறது இதுதான் கொடுமை .
சரி இந்த போட்டோ எல்லாம் பாருங்க அப்புறம் எந்த ஸ்டைல் நல்லா இருக்கும் அப்பிடி எண்டு சொல்லுங்க .